துறையூரில் உணவு வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

துறையூரில் உணவு வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
X
துறையூரில் உணவு வணிகர்களுக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
துறையூரில் உணவு வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் மாவட்ட உணவு பதுகாப்பு துறை சார்பில் செலுத்தப்பட்டது

திருச்சி மாவட்டம் துறையூரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு உணவு வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.

இந்த முகாமினை உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் உணவு வணிகர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 311 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது .17 உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையில் பதிவு உரிமம் வழங்கப்பட்டது.

இந்த முகாமில் சிறப்பு விருந்தினர்களாக துறையூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் காமராஜ், பொருளாளர் சுப்பிரமணி, அனைத்து வியாபாரிகள் சங்க கவுரவத் தலைவர் ஆதித்த ராஜன் உள்பட அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் ஹோட்டல் சங்கத் தலைவர் பாஸ்கர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!