மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு
X

துறையூர் அருகே நடந்த நிகழ்ச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு  தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் துறையூர் கிளை சார்பாக கொப்பம்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள், இனிப்புகள், காரம் வழங்கி பொன்னாடை போர்த்தி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

நிகழ்விற்கு கிளை செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர் அசோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்கினார்கள்.

மேலும் மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் முத்துகுமார், பூபதி, நித்தியன், மகா பதஞ்சலி, ஜெயலட்சுமி, சோபனபுரம் இளங்கோவன், வெங்கடாசலபுரம் நிரஞ்சன் மற்றும் தூய்மை பணியாளர்கள் கவிதா, மீனாட்சி, தனலட்சுமி, புச்சியம்மாள், பொன்னம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு