துறையூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கேட்டு சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

துறையூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கேட்டு சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
X

துறையூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துறையூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் துறையூர்-பெரம்பலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் உள்ளது எம்ஜிஆர் நகர். சொரத்தூர் ஊராட்சிககு உட்பட்ட இந்த பகுதியில் அடிப்படை வசதிகளான மின்சார வசதி, குடிநீர் வசதி சாலை வசதிகள் செய்து தரப்படவில்லை.

அடிப்படை வசதிகள் செய்து தரக் கேட்டு பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் துறையூர் - பெரம்பலூர் சாலையில் பெருமாள் மலை அடிவாரத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் பொதுமக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது

இதனால் துறையூரிலிருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!