துறையூர் அ.தி.மு.க. வேட்பாளருக்கு முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

துறையூர் அ.தி.மு.க. வேட்பாளருக்கு முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு
X

துறையூர் ஒன்றிய இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் அபிராமி சேகருக்கு  ஆதரவாக முன்னாள் அமைச்சர்  தங்கமணி வாக்கு சேகரித்தார்.

துறையூர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரித்தார்.

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தின் பதிமூன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக அபிராமி சேகர் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதவராக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் மின்துறை அமைச்சருமான தங்கமணி கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்தார். அவருடன் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி , முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சிவபதி,பூனாட்சி,அண்ணாவி,முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு என்கிற சுப்ரமணியன், மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் சென்றனர்.



Tags

Next Story
ai solutions for small business