திருச்சி அருகே நண்பர்களுடன் சுற்றுலா சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி

திருச்சி அருகே நண்பர்களுடன் சுற்றுலா சென்ற வாலிபர்  நீரில் மூழ்கி பலி
X

பைல் படம்.

திருச்சி அருகே நண்பர்களுடன் சுற்றுலா சென்ற வாலிபர் கோரையாறு நீர் வீழ்ச்சியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மின் நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் ஹரிகிருஷ்ணன் (20). இன்ஜினியரிங் படித்து விட்டு ஆக்டிங் டிரைவராக இருந்தார், அதே ஊரை சேர்ந்த சதீஷ் (வயது 22), சங்கர்(26), ராஜகுருநாதன் (20), கிருஷ்ணா (21) ஆதித்யா(20), ஆகாஷ் (19) ஆகியோருடன் நேற்று காரில் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சைமலைக்கு சுற்றுலா சென்றார். இதில் ஹரிகிருஷ் ணன், ஒரு பாறை மீது நீர் வீழ்ச்சியை பார்த்த படி நிற்க, அதனை அவருடைய நண்பர்கள் கேமராவில் படம் பிடித்தனர். அப்போது ஹரிகிருஷ்ணன் எதிர் பாராதவிதமாக திரும்பிய போது பாறையில் இருந்து வழுக்கி நீரில் மூழ்கினார்.

தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு துறை வீரர்கள் மீட்பு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு சென்று ஹரிகிருஷ்ணனின் உடலை மீட்டு துறையூர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!