பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவர் காலில் துண்டானது 4 விரல்கள்

திருச்சி அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவரின் காலில் 4 விரல்கள் துண்டாகி உள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவர் காலில் துண்டானது 4 விரல்கள்
X

கால் விரல்கள் துண்டான மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள திருநகர் 3 வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் நிசாந்த்(வயது15). இவர் மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி திருச்சி துறையூர் நெடுஞ்சாலை உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 10 -ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி முடிந்தவுடன் நிசாந்த் வீட்டிற்கு செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறி உள்ளார்.

இந்த பேருந்து சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து எதுமலை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் பேருந்தின் ஓட்டுநராக முசிறி தாலுகா புலிவலம் காலனி தெருவை சேர்ந்த பெரியசாமி (50), நடத்துனராக சமயபுரம் இந்திரா நகர் பாரதியார் தெருவை சேர்ந்த கமல் (42 பணியில் இருந்துள்ளனர். மேலும் பேருந்தில் கூட்டமாக இருந்ததால் நிசாந்த் படியில் நின்று பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில் பஸ் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் சென்று கொண்டிருந்த போது வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த மாணவன் நிசாந்த் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் மாணவனின் இடது காலில் 4 விரல்கள் துண்டானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 24 Sep 2023 3:15 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகராட்சி சார்பில் சென்னைக்கு அனுப்பப்பட்ட ரூ.25 லட்சம்...
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பாபர் மசூதி இடிப்பை கண்டித்து திருச்சியில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    Rajju Porutham Meaning திருமணப் பொருத்தத்தில் முக்கிய பங்கு...
  4. சேலம்
    சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நோபல் பரிசு பெற்ற புத்தங்கள்: ஆட்சியர்...
  5. தமிழ்நாடு
    டெல்டா மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் முடங்கிய மீன்பிடி தொழில்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்வு: ஒன்றுக்கு ரூ.4.90 ஆக...
  7. திருமங்கலம்
    மதுரையில் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    New Year Wishes In Tamil 2024 புத்துணர்ச்சியைத் தரும் புத்தாண்டே ...
  9. சேலம்
    சேலத்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்கள்
  10. சினிமா
    பாட்டு இல்லாத படம் குற்றவாளி! அமீரின் முதல் படம் இதுதான்...!