துறையூர் அருகே 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்

துறையூர் அருகே 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்
X

திருச்சி மாவட்டம் துறையூர்  அருகே நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே 100 நாள் பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. போக்குவரத்தும் தடைபட்டது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வரதராஜபுரத்தை அடுத்த செங்காட்டுப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்த கிராமத்தைசேர்ந்த சுமார் 200 பேர் தினமும் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காலை வழக்கம் போல் 7 மணிக்கு அவர்கள் பணிக்கு வந்தனர். ஆனால் மழை பெய்த காரணத்தால் வேலை இல்லை என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் ஒருமணி நேரம் கழித்து அலுவலர்கள் இப்படி கூறியதால் ஆத்திரமடைந்த பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு அலுவலர்கள் செவிசாய்க்காத காரணத்தால் அப்பகுதியில் சாலை மறியலில்ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மறியல் நடைபெற்றும் சம்பவ இடத்திற்கு அரசு அதிகாரிகள் யாரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இது தொடர்பாக போராட்டம் நடத்தியவர்கள் கூறுகையில் செங்காட்டுப்பட்டி அருகிலுள்ள கிராமங்களில் இன்று 100 நாள்வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். செங்காட்டுப்பட்டி கிராமத்தில் மட்டும் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கிறார்கள். அதிலும் தற்போது மழை காரணத்தை கூறி இன்றும், ஒரு நாள் பணிஇல்லை என்று கூறிவிட்டார்கள். இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். அதனால் தான் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story