துறையூர் அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை கொள்ளை : போலீசார் தீவிர விசாரணை
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த சிங்களாந்தபுரம் , பாரதி நகரைச் சேர்ந்த செட்டி என்பவரது மகன் ராமு (63) . சென்னை ஆவடியில் உள்ள டிபென்ஸ் இன்ஜின் பேக்டரியில் கிளர்க்காக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.தனது மனைவியுடன் சென்னை ஆவடியில் உள்ள மகன் வீட்டிற்கு கடந்த 23-05-2021 அன்று சென்றுள்ளார். மீண்டும் இன்று (13ந் தேதி) மாலை ஊர் திரும்பிய ராமு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்.
உள்ளே சென்று பார்த்த போது , பொருட்கள் சிதறியும், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 பவுன் ஆரம் மற்றும் 3 பவுன் நெக்லஸ் உள்ளிட்ட , சுமார் 7 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக துறையூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் விதுன்குமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் பார்வையிட்டு சோதனை மேற்கொண்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து ,நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu