திருச்சி திருவெறும்பூர் அருகே வாலிபர் பழிக்குப்பழியாக வெட்டி கொலை

திருச்சி திருவெறும்பூர் அருகே வாலிபர் பழிக்குப்பழியாக வெட்டி கொலை
X
திருச்சி திருவெறும்பூர் அருகே வாலிபர் பழிக்கு பழியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டி பொன்னேரி புரத்தைச் சேர்ந்தவர் குழந்தை (எ) நொண்டி குழந்தை. இவரது மகன் பெலிக்ஸ்ஜான்சன் (வயது 28) என்பவர் இன்று மாலை ஆட்டோவில் மாவடிகுளம் அருகே சென்ற பொழுது மர்ம நபர்கள் வழிமறித்து சராமரியாக வெட்டியுள்ளனர்.

இதில் பெலிக்ஸ்ஜான்சன் முகம் சிதைந்து போனதோடு கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே பெலிக்ஸ்ஜான்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெலிக்ஸ் ஜான்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன் திருச்சி பொன்மலைபட்டி கடைவீதியில் சின்ராசு என்பவரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அலெக்ஸ் ரவுடியின் தம்பிதான் இந்த பெலிக்ஸ் ஜான்சன் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் சின்ராசு கொலை செய்யப்பட்டபோது அவரது நண்பர்கள் விரைவில் என்று போஸ்டர் அடித்து இருந்தனர். இது சம்பந்தமாக பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து சில பேரை கைது செய்தனர்.

அதனால் இந்தக் கொலை பழிக்குப் பழி நடந்திருக்குமோ என திருவெறும்பூர் போலீசார் சந்தேகப்படுகின்றனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இன்று மதியம் ஆலத்தூர் அருகே தனியார் பைனான்ஸ் ஊழியரை மிளகாய் பொடி தூவி வாலிபர்கள் வெட்ட முயற்சி செய்த அந்தப் பகுதியிலேயே மாலையில் இந்த கொலை நடந்திருப்பது திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
ai future project