திருச்சி அரியமங்கலத்தில் வேலைக்கு சென்ற சதாம் உசேன் மாயம்

திருச்சி அரியமங்கலத்தில் வேலைக்கு சென்ற  சதாம் உசேன் மாயம்
X

அரியமங்கலம் காவல் நிலையம் (பைல் படம்)

திருச்சி அரியமங்கலத்தில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற வாலிபர் மாயமானதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி அரியமங்கலம் ஜெகநாதபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரியாஸ் அலிகான் என்பவரின் மகன் சதாம் உசேன் (வயது 27). இவர் திருச்சியில் உள்ள டைல்ஸ் விற்பனை ஷோரூம் ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சதாம் உசேன் அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. இது குறித்து அவரது தந்தை, அரியமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சதாம் உசேனை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!