திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
X
திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி அரியமங்கலம் அம்மா குளத்தை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது 31). இவரது வீட்டின் அருகே தீபாவளி அன்று அதே பகுதி பாரதியார் தெருவை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 24), ஆகாஷ் (எ) தனசேகர் (வயது 21), தவ்பீக்,கேசவன் ஆகியோர் வினோத் என்பவருடன் சேர்ந்துபட்டாசு வெடித்து கொண்டிருந்தனர்.

அப்போதுவினோத்துடன் ஏற்பட்ட வாய்த்தகராறில் மனோஜ்குமார் உள்பட 4 பேரும் வினோத்தை தாக்கியுள்ளனர்.இதனை பார்த்த இஸ்மாயில், இது குறித்து வினோத் மனைவிக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால்ஆத்திரமடைந்த மனோஜ்குமார் உள்பட 4 பேரும்இஸ்மாயிலுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போதுகணவருக்கு ஆதரவாக வந்த இஸ்மாயிலின் மனைவி ஷகிலாபானுவை தாக்கி கீழே தள்ளியுள்ளனர்.

இது குறித்துஇஸ்மாயில் கொடுத்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார்வழக்குப்திந்து மனோஜ்குமார், ஆகாஷ் ஆகிய 2 பேரைகைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!