தற்கொலைக்கு முயற்சித்து மனம்மாறியதால் சிக்கிய பெண்: தீயணைப்புத்துறையினர் மீட்பு

தற்கொலைக்கு முயற்சித்து மனம்மாறியதால் சிக்கிய பெண்: தீயணைப்புத்துறையினர் மீட்பு
X
திருச்சியில் இளம்பெண் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டனர்.

திருச்சி, ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் பகுதியை சேர்ந்தவர் துளசிமணி (வயது 35). திருமணம் ஆகாத இவர் மன விரக்தியின் காரணமாக அதே பகுதியில் காவேரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள சென்றுள்ளார்.

இதன் காரணமாக காவேரி ஆற்று நீரில் அவர் குதித்துள்ளார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் காவேரி ஆற்றில் அவர் உயரத்தை விட குறைவான அளவே தண்ணீர் ஓடியதால் அவரால் மூழ்கி தற்கொலை செய்து கொள்ள முடிய வில்லை.

இதனால் மனதை மாற்றிக்கொண்ட துளசிமணி கரைக்கு திரும்ப முயற்சித்தபோது, அவரால் திரும்பி வர முடியவில்லை. நீரின் வேகத்தால் அவரால் திரும்ப முடியவில்லை. இதனால் தண்ணீரில் நின்றுக்கொண்டு கைகளை உயர்த்தி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டுள்ளார்.

இதனைக் கண்ட அந்த பகுதி பொதுமக்கள் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடம் விரைந்து சென்ற கன்டோன்மெண்ட் தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் உதவியுடன் நீருக்குள் சென்று அவரை மீட்டு கரைக்கு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story