திருவெறும்பூரில் நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்

திருவெறும்பூரில் நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்
X

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாற்றுத்திறனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.

திருவெறும்பூரில் நடந்த அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாய்லர் ஆலை சமூகக் கூடத்தில் இன்று தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார்.

இந்த விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு 88 பயனாளிகளுக்கு ரூ. 35 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் உள்பட முதியோர்கள் நலத்திட்ட உதவிகளை பெற்றனர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி பழனி குமார், முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!