திருவெறும்பூர் அருகே வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி பா.ஜ.க. அன்னதானம்

திருவெறும்பூர் அருகே வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி பா.ஜ.க.  அன்னதானம்
X

வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி பா.ஜ.க. சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவெறும்பூர் அருகே வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி பா.ஜ.க. சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பாக முன்னாள் மறைந்த பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 97 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதைன முன்னிட்டு பூலாங்குடி காலனியில் வாஜ்பாய் திருவுருவ படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்து கொடியேற்றி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கபட்டது.

இந்த நிகழ்வுக்கு மண்டல் தலைவர் மகாசக்தி முருகேசன் தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் ,மாநில செயலாளர் பார்வதி நடராஜன் மாவட்ட துணை தலைவர் சி. இந்திரன் மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் அன்னதானத்தை துவக்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்வுக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் வெள்ளையம்மாள் மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் கனகராஜ், முத்துகுமார் , மாவட்ட மகளிரணி துணை தலைவர் ஜென்னி சிவா நந்தினி, ஜெயராம். பாலு பாலமுருகன் சண்முகசுந்தரம்,சின்ராஜ், பாலசுப்பிரமணியன், பாலசந்தர், பாக்யராஜ், முரளி, கிளிண்டன் ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!