திருச்சி அருகே டூ வீலர் திருடர்கள் இருவர் கைது - வாகனம் பறிமுதல்

திருச்சி அருகே டூ வீலர் திருடர்கள் இருவர் கைது - வாகனம் பறிமுதல்
X
திருச்சி அரியமங்கலம் பகுதியில் டூ வீலர் திருட்டு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்த முகமது உஸ்மான் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை, அப்பகுதியில் நிறுத்தி இருந்தார். அந்த வாகனம் திருடு போனது. இது குறித்து அரியமங்கலம் போலீசாரிடம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, நாகூர் ஹனிபா, பாலசுப்ரமணியன் என்ற இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் திருச்சி காமராஜர் நகரைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் இருசக்கர வாகனம், அல்லிமால் தெருவில் நிறுத்தி இருந்த போது, திருடுபோனது. இது குறித்த புகாரின் பேரில், கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா: நாமக்கலில் சிறப்பு கருத்தரங்கம்