திருச்சியில் புலி நகம், நரி பல், யானை தந்தம் வைத்திருந்த இருவர் கைது

திருச்சியில் புலி நகம், நரி பல், யானை தந்தம் வைத்திருந்த இருவர் கைது
X

திருச்சியில் புலி பல், யானை தந்தம், வைத்திருந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திருச்சியில் புலி நகம், நரி பல், யானை தந்தம் விற்பனைக்கு வைத்திருந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி திருவெறும்பூரை அடுத்த தேவராயநேரியில் ஏராளமான நரிக்குறவர் மக்கள் வசித்து வருகின்றனர் இதில் பலர் மான் கொம்பு, நரியின் பற்கள், யானை முடி மற்றும் தந்தத்தின் பகுதிகளை விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து திருச்சி வனத்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இதையடுத்து திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் இன்று அந்த பகுதி முழுவதும் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் தேவராயநேரியை சேர்ந்த பாண்டி மற்றும் அருண் சௌந்தர்ராஜன் யானையின் தந்தத்தை வைத்து இருந்தது தெரியவந்தது

இதனையடுத்து அவர்களிடம் இருந்து யானை தந்தத்தால் ஆன பொருட்கள், புலி நகம், நரி பல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!