திருச்சி எஸ்.எஸ்.ஐ. வீட்டிற்கு சென்று அமைச்சர் கே.என். நேரு ஆறுதல்

திருச்சி அருகே கொலை செய்யப்பட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வீட்டிற்கு அமைச்சர் நேரு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
திருச்சி நவல்பட்டு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ஆடு திருடர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்த போது, கீரனூர் பள்ளத்துப்பட்டி மணி விஜய் நகர் ரயில்வே பாலம் அருகில், வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவரின் உடலானது 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் திருவெறும்பூர், நவல்பட்டு, சோழமாநகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, எஸ்எஸ்ஐ-யின் மனைவி கவிதா, மகன் குகன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அப்பொழுது முதல்வர் அறிவித்த ரூ. 1 கோடி உதவி தொகையானது விரைவில் உங்களுக்கு வழங்கப்படும் என அவர் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அவருடன் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அவரை தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது அரசு அறிவித்தது போல உங்களது குடும்பத்தினருக்குஅரசு வேலை அளிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu