திருச்சி எஸ்.எஸ்.ஐ. குடும்பத்திற்கு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் உதவி

திருச்சி எஸ்.எஸ்.ஐ. குடும்பத்திற்கு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் உதவி
X

கொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்க தலைவரும், கூடுதல் டி.ஜி.பி.யுமான  அமல்ராஜ் நிதி உதவி வழங்கினார்.

ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. குடும்பத்திற்கு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கடந்த மாதம் ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் சார்பாக நிதி வழங்கும் நிகழ்ச்சி இன்று திருச்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடந்தது. இதில் கூடுதல் டி.ஜி.பி. (ஆப்பரேசன்) அ. அமல்ராஜ் கலந்து கொண்டு ரூ. 4 லட்சத்து 98 ஆயிரத்து 480/- க்கான காசோலையை பூமிநாதன் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

அப்போது மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி.பாலகிருஷ்ணன், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் மற்றும் திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!