திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையின் 36-வது ஆண்டு விழா

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையின் 36-வது ஆண்டு விழா
X

திருச்சியில் நடந்த ரயில்வே பாதுகாப்பு படை ஆண்டு விழாவில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரி ஒருவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருச்சியில் ரயில்வே பாதுகாப்பு படையின் 36-வது எழுச்சி நாள் பாதுகாப்பு விழா அணிவகுப்புடன் நடைபெற்றது.

ரயில்வே பாதுகாப்பு படையின் 36–ஆம் ஆண்டு எழுச்சி நாள் அணிவகுப்பு விழா திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் இன்று காலை நடந்தது.

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ரயில்வே பாதுகாப்புப் படையின் முதுநிலை கோட்ட ஆணையர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மதுபானங்கள் கடத்தல், செயின் பறிப்பு, சூட்கேஸ் ,பேக் போன்ற உடமைகளில் தங்கம் மற்றும் போதைப் பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற, வழிதவறிய குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு போன்ற பணிகளில் சிறப்பாக பணியாற்றியரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்களான ஜெயபிரகாஷ், ரவி முருகேசன், தனபால், அருண்குமார் மற்றும் செந்தமிழ் செல்வி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை ரயில்வே பாதுகாப்புப் படையின் முதுநிலை கோட்ட ஆணையர் ராமகிருஷ்ணன் வழங்கி வாழ்த்துக் கூறினார். இவ்விழாவில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி கோட்ட ஆணையர் ஏ.கே. பாடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!