இந்திய அரசு நிறுவனத்துடன் திருச்சி என்.ஐ.டி. புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருச்சி என்.ஐ.டி. இந்திய அரசு நிறுவனத்துடன் திறன் மேம்பாடு தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் என்கிற இந்திய அரசு நிறுவனமானது, அறிவைப் பகிர்வதற்கும், பரஸ்பரம் திறனை வளர்ப்பதற்கும் கல்வியாளர்களுடன் நீண்டகால ஒத்துழைப்பிற்கு அர்ப்பணித்துள்ளது. இது சம்பந்தமாக அந்நிறுவனத்தால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகிற பெங்களூரு தென் மண்டல மின்பகிர்வு மையம் கல்வி-தொழில் தொடர்புகளை வலுப்படுத்துவதற்காக திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்துடன் (என்.ஐ.டி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
திருச்சி என்.ஐ.டி.யின் இயக்குனர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ், என்.ஐ.டி, டீன் டாக்டர் எஸ். முத்துக்குமரன், இ.இ.இ. துறை தலைவர் டாக்டர் வி. சங்கரநாராயணன், பேராசிரியர்கள் டாக்டர். என். குமரேசன், டாக்டர் எம்.பி செல்வன், டாக்டர். எம். வெங்கட கிருத்திகா மற்றும் டாக்டர் செந்தில் அரசு மற்றும் இந்திய அரசு நிறுவனத்தின் உதவி மேலாளர் ஜெரோம் அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மின் பொறியியல் பகுதியில் பணிபுரியும் ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களுக்கு நேரடி அனுபவத்தை அதிகரிக்கும் என்று டாக்டர் மினி ஷாஜி தாமஸ் குறிப்பிட்டார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய மின் கட்டத்தை நிர்வகித்தல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றின் செயல்திறனை நிச்சயமாக மேம்படுத்தும்.இந்தியாவின் மின்சாரத் துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்த ஆராய்ச்சியை ஊக்குவிப்பது, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வது மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியீடுகளை ஊக்குவித்தல் எல்லாம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பரந்த நோக்கங்கள் ஆகும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு,பேராசிரியர் குமரேசன் , இந்திய அரசு நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் ஸ்ரீ எஸ்.பி. குமார் ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu