திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் சி.சி.டி.வி.கட்டுப்பாட்டு அறை திறப்பு

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில்  சி.சி.டி.வி.கட்டுப்பாட்டு அறை திறப்பு
X

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் சி.சி.டி.வி. கேமரா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அலுவலகத்தில் சி.சி.டி.வி. கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது.

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையின் பாதுகாப்பு அலுவலகத்தில் உயர் உணர்திறன் கொண்ட சி.சி.டி.வி. கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது. இதனை துப்பாக்கி தொழிற்சாலை ஐ.ஓ.எப்.எஸ். பொறுப்பு அதிகாரி ராஜீவ் ஜெயின் இன்று திறந்து வைத்தார். இந்த முன்னோடித் திட்டத்தின் முதல் கட்டமாக மொத்தம் 65 கேமராக்கள் தொழிற்சாலையின் அனைத்து நுழைவுப் பாதைகளிலும், பிரதான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பொருத்தப்பட்டு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த கண்காணிப்பு கோமராக்களின் பதிவுகளை ஒருங்கிணைத்து 24 மணிநேரமும் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையின் யோசனைக்கு வழிவகுத்ததாகவும் அதனை தொடர்ந்து 40 கூடுதல் கேமராக்கள் கொண்ட இரண்டாம் கட்ட பணி இருவார காலத்திற்குள் முடியும்.மேலும் துப்பாக்கி தொழிற்சாலை பல்வேறு கட்ட பாதுகாப்பு அடுக்குகளைக் கொண்டுள்ளது. தற்போதைய திட்டம் பாதுகாப்பு அமைப்பை டிஜிட்டல் மற்றும் நெட்வொர்க்கிங் நிலைக்கு மேம்படுத்தும். துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மூன்று கடையில் திருட்டு சம்பவங்கள் மற்றும் ஒரு ஏ.டி.எம். இயந்திரத்தை சேதப்படுத்திய சம்பவம் குற்றம் நடந்த 12 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நெட்வொர்க்கின் முக்கிய வெற்றிகரமான சிறப்பு அம்சமாக, கீரனூர் அருகே ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்கில் போலீசார் துப்புதுலக்குவதற்கு துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாகம் வழங்கிய கண்காணிப்பு கேமரா உதவியது.

இந்தத் திட்டம் துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் கார்த்திகேஷால் திட்டமிடப்பட்டு வழிநடத்தப்பட்டு வி. எச். ஒ.எஸ் விஜிகுமார் மற்றும் மேற்பார்வையாளர், செந்தில்குமாரால் முறையாக செயல்படுத்தப்பட்டது.

தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலுக்கு ராஜீவ் ஜெயின் உறுதியளித்தார்.

மேலும் இந்த கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை துப்பாக்கி தொழிற்சாலையின் மூன்றாவது கண்" ஆக. செயல்படும் என்று குறிப்பிட்டார்.

நம் நாட்டில் 41 ஆயுதத் தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால், உயர்தர பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரத்யேக கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்ட ஒரே தொழிற்சாலை திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஆகும் என பெருமையுடன் கூறினார்.

இந்த விழாவில் மூத்த அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலையின் பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!