திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் குண்டு வெடித்து 2 ஊழியர்கள் காயம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ளது துப்பாக்கி தொழிற்சாலை. அண்மையில் துப்பாக்கி தொழிற்சாலை மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இந்தியா லிமிடெட் அட்வான்ஸ்டு வெப்பன்ஸ் அண்ட் எக்ஸ் மெண்டல் இந்தியா லிமிடெட் (ஏ.டபிள்யூ. இ. ஐ. எல்) என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது.
இங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் ராணுவம், காவல்துறை, சிறப்பு படை உள்ளிட்ட பல்வேறு அரசு படை பிரிவினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் இத்தகைய துப்பாக்கிகள் அதன் செயல்பாடுகள் குறித்து அங்கேயே சோதனை செய்வது வழக்கம். அதன் ஒரு பகுதியாக துப்பாக்கி தொழிற்சாலையில் ஏ. எம். ஆர். ஆண்டி மெட்டீரியல் ரைபிள் என்னும் ரக துப்பாக்கியை அங்கு வேலை பார்த்து வரும் துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் பிரகாஷ் (வயது 42), திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் 3-வது தெருவைச் சேர்ந்த அழகேசன் (வயது 57) ஆகிய இருவரும் பரிசோதித்தனர். அப்போது சேம்பரில் இருந்த குண்டு வெடித்துச் சிதறி உள்ளது. இதில் பிரகாஷ் மற்றும் அழகேசன் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவரையும் சக ஊழியர்கள் காப்பாற்றி ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் பற்றி நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இது குறித்து சக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் தொழிற்சாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu