திருச்சி கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி

திருச்சி கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி
X

பைல் படம்

திருச்சிஅரிய மங்கலத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் . இவர் கொரோனா உறுதி செய்யப்பட்டு கடந்த 27ம்தேதி முதல் என்ஐடி வளாகத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு அங்கு சிகிச்சையில் உள்ளார்.

நேற்று இரவு 9.10 மணிக்கு, ஆரோக்கியராஜ் திடீரென அவ்வளாகத்தில் உள்ள 2வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவருக்கு இடது தொடை மற்றும் கீழ் தாடை யில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த கலெக்டர் சிவராசு, சம்பவ இடத்தை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். ஆரோக்கியராஜ் 7 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப் பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும், குடும்ப பிரச்னையில் அவர் தற்கொலைக்கு முயற்சித் துள்ளதாகவும் கலெக்டர் சிவராசு தெரிவித்தார். இது குறித்து துவாக்குடி போலீ சார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!