திருச்சி பெல் நிறுவன ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது

திருச்சி பெல் நிறுவன ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது
X
திருச்சி பெல் நிறுவன ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.

திருவெறும்பூர் மாணிக்கம் நகர் விரிவாக்கம், வேலன் நகர் பகுதியை சேர்ந்தவர் கம்ப கண்ணன். இவர் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 32). கம்ப கண்ணன் நண்பரான பெல் குடியிருப்பு, ஏ செக்டர் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் அருள்ஜோதி (வயது 39). இவரும் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் தனலட்சுமி வீட்டின் எதிரே அருள்ஜோதி, மாணிக்கம் நகர் விரிவாக்கம் வேலன் நகரில் வீடு கட்டி வருகிறார். அதனால் அடிக்கடி கம்பகண்ணன் வீட்டிற்கு சென்று வரும்போது தனலட்சுமியோடு அண்ணன் தங்கை போல் பழக்கம் ஏற்பட்டது.

ஆனால் அருள்ஜோதி தனலட்சுமி மீது தவறான கண்ணோட்டத்தில் பழகி வந்துள்ளார். அதன் விளைவாக கம்பகண்ணன் வீட்டில் இல்லாத போது தனலட்சுமியை அருள்ஜோதி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், அதனை அருள் ஜோதி தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பல முறை மிரட்டி தனலட்சுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு வெளியில் சொன்னால் இதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து விடுவேன் என்றும் மேலும் இதனை உன் கணவரிடமோ அல்லது என் மனைவியிடமோ நீ சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக தனலட்சுமி திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார் அருள்ஜோதியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெல் நிறுவன குடியிருப்பு பகுதியில் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்