திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திற்கு தமிழக முதல் அமைச்சர் கேடயம்

திருவெறும்பூர்   போலீஸ் நிலையத்திற்கு தமிழக முதல் அமைச்சர் கேடயம்
X

திருவெறும்பூர்  போலீஸ் நிலையத்திற்கு முதல் அமைச்சர் கேடயம் வழங்கப்பட்டது.

திருவெறும்பூர் போலீஸ்நிலையத்திற்கு சிறப்பான பணிக்காக தமிழக முதல் அமைச்சர் அளித்த கேடயத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

சட்டம், ஒழுங்கு பிரச்சினை இல்லாமலும், குற்ற சம்பவங்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றங்களை தடுத்து, சாராயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஒழித்து, காவல் நிலையத்தை தூய்மையாகவும், சுகாதாரமான முறையிலும், குற்ற பதிவேடுகளை முறையாக செய்து, பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்த ரவுடிகளுக்கு குண்டாஸ் பெற்று கொடுத்தது உள்ளிட்ட, அனைத்து பணிகளிலும் தமிழக அளவில் அளவில் 13-வது இடத்தையும், திருச்சி மாவட்டத்தில் முதலிடத்தையும் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

திருவெறும்பூர் காவல் நிலையம் கடந்த 2019-ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் முதன்மையான காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட கேடயத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி திருவெறும்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலையில், அப்போதைய திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளரும், தற்போதைய துவாக்குடி காவல் நிலைய ஆய்வாளருமான ஞானவேலுவிற்கு வழங்கினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!