பொதுமக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய திருவெறும்பூர் போலீசார்
தமிழகம் முழுவதும் கொரொனா இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் பல அப்பாவிகள் தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர்.இதனால் தமிழக அரசு இதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் பொதுமக்கள் கட்டாயம் வீட்டில் இருந்து வெளியில் வரும் போது மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும், தேவையில்லாத பயணத்தை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. இருந்தும் பொதுமக்கள் அலட்சியத்துடன் மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சுற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் திருவெறும்பூர் காவல்துறை சார்பில் திருவெரும்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் மாஸ் அணியாமல் வருபவர்களுக்கு மாஸ் வழங்கியும், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு சானீடைசர் வழங்கியதோடு கொரொனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu