திருவெறும்பூர் திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி காட்டூர் பகுதியில் வாக்கு சேகரிப்பு

திருவெறும்பூர் திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி காட்டூர் பகுதியில் வாக்கு சேகரிப்பு
X
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காட்டூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவெறும்பூர் தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காட்டூர் பகுதி உள்ள குழந்தை இயேசு திருத்தலத்தின் பங்கு தந்தையை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

குழந்தை இயேசு திருத்தலத்திற்கு திருப்பலிக்கு வருகை புரிந்த பொதுமக்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், காட்டூர் பகுதி செயலாளர் ஓ.நீலமேகம், வட்ட செயலாளர் தமிழ் செல்வன் மற்றும் மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக உடன் சென்றனர்.



Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!