திருச்சி திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம்

திருச்சி திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
X

திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது.

திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் மகாசக்தி முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் சி. இந்திரன் முன்னிலை வகித்தார். இந்த செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பட்டியல் அணி பொதுசெயலாளர் சத்திரப்பட்டி பால்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஒன்றிய துணை தலைவர் முத்துகுமார் வரவேற்று பேசினார்.

இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் கிளை தலைவர்கள் மண்டல் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த செயற்குழுவில் நவல்பட்டு அண்ணாநகர் அப்துல்கலாம் சாலை பகுதிகளில் மழை காலங்களில் தெருக்களிலும் வீடுகளிலும் வெள்ளம் சூழ்கிறது. இந்த வெள்ளநீரை தடுத்து முறையாக வாய்க்கால் அமைத்து கட்டளை வாய்க்காலில் கலக்க செய்திடுமாறு பஞ்சாயத்து நிர்வாகத்தை கேட்டுகொள்கிறது. குண்டூர் பஞ்சாயத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியை உயர்நிலைபள்ளியாக உயர்த்த வேண்டும்.

குண்டூர் எம்.ஐ.இ.டியில் ஏழை எளிய மக்கள் பசியாற கலைஞர் உணவகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டூர் பர்மா காலனியில் உள்ள ரேஷன் கடை மிகவும் பழுதடைந்துள்ளது. எனவே புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும்.

சூரியூர் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் காந்தலூர் ஊருக்குள் சென்று வரவேண்டும். பெரிய சூரியூரில் உள்ள காந்தி சிலைக்கு நிழற்குடை அமைத்து தரவேண்டும். நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றிதிரியும் மாடுகளை உரிமையாளரிடமோ அல்லது பாதுகாப்பாக கோசாலைகளில் பரமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் குண்டூர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!