ஊதியம் வழங்கவில்லை- தற்காலிக பணியாளர்கள் புகார்

ஊதியம் வழங்கவில்லை- தற்காலிக பணியாளர்கள்  புகார்
X

திருச்சியில் தற்காலிக பணியாளர்கள் ஊதியம் வழங்கப்படவில்லை என புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது .

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி பொன்மலைப்பட்டி தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை தற்காலிக சுகாதார பணியாளர்களாக ஆர்.ஐ. வேலைக்கு அமர்த்தினார். அவர்களுக்கு ஊதியமாக 1000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்.ஆனால் தற்போது அதனை 250 ஆக குறைத்துள்ளனர். எனவே தற்காலிக தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு அன்று இரவு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட கலெக்டரிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உரிய ஊதியத்தை பெற்று தர கோரி பாதிக்கப்பட்ட வாலிபர்கள் 28 பேர்மனு அளித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!