திருவெறும்பூர் பகுதிகளில் 24 இருசக்கர வாகனங்கள் திருடியவர் கைது

திருவெறும்பூர் பகுதிகளில் 24 இருசக்கர வாகனங்கள் திருடியவர் கைது
X
பறிமுதல் செய்யப்பட்ட திருட்டு வாகனங்கள் போலீஸ் நிலையம் முன் நிறுத்தப்பட்டு இருந்தது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதிகளில் 24 இருசக்கர வாகனங்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தது. அதனை கட்டுப்படுத்த குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என திருச்சி மாவட்ட எஸ்.பி. சுர்ஜித்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் திருவெறும்பூர் டி.எஸ்.பி. சுரேஷ்குமார் மேற்பார்வையில் திருவெறும்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் திருவெறும்பூர் குற்றப்பிரிவு போலீசார் கல்லணை பிரிவு ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் அருகே வசித்து வரும் யூசுப் மகன் ஜான்பாட்ஷா என்பவரை பிடித்து விசாரணை செய்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவரை திருவெறும்பூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று முறையாக விசாரணை செய்தபோது, ஜான்பாட்ஷா திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர், நவல்பட்டு, துவாக்குடி, மணிகண்டம் உள்ளிட்ட பகுதிகளில் 17 இருசக்கர வாகனங்களை திருடியதாகவும் மேலும் லால்குடி, கொள்ளிடம், சமயபுரம் ஆகிய பகுதிகளில் 3 சக்கர வாகனங்களையும், திருச்சி மாநகர் பகுதியில் ஒன்று, தஞ்சை பகுதியில் 3 இரு சக்கர வாகனங்கள் உட்பட 24 வாகனங்களை திருடியதாக ஒப்புக்கொண்டார்.

அதன் அடிப்படையில் ஜான்பாட்ஷாவிடம் இருந்து 24 இரு சக்கர வாகனங்களை திருவெறும்பூர் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
the future of ai in healthcare