திருச்சியில் கற்போம் எழுதுவோம் இயக்க மாநில விருது வழங்கும் விழா

திருச்சியில் கற்போம் எழுதுவோம் இயக்க மாநில விருது வழங்கும் விழா
X

விழாவில் மாநில அளவிலான விருதுகளை அமைச்சர்கள்  கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினர்.

திருச்சி திருவெறும்பூரில் கற்போம் எழுதுவோம் இயக்க மாநில விருது வழங்கும் விழா நடைபெற்றது.

தமிழ்நாட்டில், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்கிடும் நோக்கில், கற்போம் எழுதுவோம் இயக்கம் என்கிற எழுத்தறிவுத் திட்டம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் 60-40 என்கிற நிதிப்பங்களிப்பின் கீழ் ரூ.7.1 கோடி மதிப்பீட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் இலக்கான 310 இலட்சம் பேருக்கு அடிப்படைக் கல்வி வழங்கிட வேண்டும் என்பதை விஞ்சி. 310 இலட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை குறிப்பிட்ட திட்ட காலத்திற்கு முன்னரே வழங்கிய ஒரே மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

இதன் தொடர்ச்சியாக, அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த 111 கற்போர் மையங்களுக்கான பாராட்டுச் சான்றிதழ் கேடயம் மற்றும் பதக்கங்களை உள்ளடக்கிய மாநில எழுத்தறிவு விருது வழங்கும் விழா நடந்தது.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்த இந்த விழாவிற்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கம் கற்போம் எழுதுவோம் இயக்க திட்ட இயக்குனர் குப்புசாமி திட்ட விளக்க உரையாற்றினார்.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது

தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு 3 மையங்கள் தலைமை ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கும் விழா தற்போது நடைபெறுவதாகவும் தமிழக முதல்வர் சென்னையில் கடந்த மாதம் 3 -ஆம் தேதியே 3 மையங்களுக்கு விருது வழங்கியதாகவும் தற்போது மீதமுள்ள 111 மையங்களை சேர்ந்த தன்னார்வலர்களுக்கு விருது வழங்கினார்.

கடந்த ஆண்டு 3 லட்சத்து 10 எழுதப்படிக்க தெரியாதவர்கள் படிக்க வைப்பது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும் ஆனால் அதையும் தாண்டி 3 லட்சத்து 19 ஆயிரத்தை அடைந்துள்ளனர்.

இதற்கு காரணமான தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழ்நாட்டில் மொத்தம் 15 ஆயிரத்து 823 மையங்கள் உள்ளது. மாவட்டம் தோறும் 3 மையம் என்ற அடிப்படையில் 114 மையங்களில் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகிறது.

இது மற்ற தன்னார்வலர்கள் ஊக்குவிப்பது போல் இருக்கும். 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் வறுமையின் காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை 15 முதல் 25 வரையிலும், 15 வயது முதல் 35 வது என பல திட்டங்கள் உள்ளது. 15 வயது படிக்கும் எழுதும் திட்டமாக இது செயல்படும்.மணிகண்டம் ஒன்றியத்தில் அஞ்சலை பாட்டி தனது பெயரை அஞ்சலை என்று எழுதி தமிழ்நாடு முழுவதும் பேசப்படும் பொருளாக மாறியது என்றும் கூறினார்.

தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நூத்தி பதினொரு மையங்களை சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

முன்னதாக பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர்கல்வி இயக்கத்தின் துணை இயக்குனர் அமுதவல்லி வரவேற்றார்.இந்த விழாவில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள 114 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர் மற்றும் தன்னார்வ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி நன்றி கூறினார்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!