ஸ்ரீரங்கம் கோவிலில் இராப்பத்து இன்று 6-ம் திருநாள் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் கோவிலில் இராப்பத்து இன்று 6-ம் திருநாள் நிகழ்ச்சி
X

ஸ்ரீரங்கம்கோயில் பரமபதவாசல்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ராப்பத்து இன்று 6-ஆம் திருநாள் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுந்த ஏகாதசி விழாவில் இராப்பத்து இன்று 6-ஆம் திருநாள். நண்பகல் 12 மணி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு. பிற்பகல் 1 மணி பரமபத வாசல் திறப்பு. பிற்பகல் 2 மணி : திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல். பிற்பகல் 2 மணி முதல் 2.30 மணி வரை: அலங்காரம் அமுது செய்ய திரை. மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை: அரையர் சேவை. இரவு 7 மணி முதல் இரவு 7.30 மணி வரை: திருப்பாவாடை கோஷ்டி. இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை: வெள்ளி சம்பா அமுது செய்ய திரை. இரவு 9.30 மணி: திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பாடு. இரவு 10.30 மணி: வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல்.

மூலஸ்தான சேவைக்கு காலை 5.30 மணி முதல் காலை 9 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி உண்டு. காலை 9 மணி முதல் பகல் 1மணி வரை அனுமதி இல்லை.

பகல் 1 மணி முதல் இரவு 7.30 மணி வரை அனுமதி உண்டு. இரவு 7.30 மணிக்கு பிறகு மூலஸ்தான சேவை கிடையாது. பரமபத வாசல் பகல் 1 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!