திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இலங்கை மீனவர்கள் 10 பேர் விடுதலை

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இலங்கை மீனவர்கள் 10 பேர் விடுதலை
X
இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் படகு பழுதடைந்து தமிழக எல்லைப் பகுதிக்குள் வந்தது.அனைவரும் கைது செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களாக வழக்கு நடைபெற்றது.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 80 பேர் வெளிநாடுகளை சேர்ந்த 30 பேர் என மொத்தம் 110 பேர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் உள்ளனர்.

கொடுமையான கொரோனா காலத்திலாவது தங்களை விடுதலை செய்ய வேண்டும். குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்து அவ்வப்போது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்..

இவர்களை கடந்த மாதம் சந்தித்த மறுவாழ்வு திட்ட ஆணையர்கள் கொண்ட குழு வருகிற 20-ஆம் தேதிக்குள் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக சொல்லி சென்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கொண்ட படகு பழுதடைந்து தமிழக எல்லைப் பகுதிக்குள் வந்தது. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஒன்றரை வருடங்களாக வழக்கு நடைபெற்று திருச்சி மத்திய சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்த நிலையில், கடந்த 7 மாதங்களாக மத்திய சிறை வளாகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

தற்போது அந்த பத்து மீனவர்களும் விடுவிக்கப்பட்டு இன்று இரவு 10 மணிக்கு சென்னையிலிருந்து இலங்கை செல்லும் விமானத்தில் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர் ...

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!