திருவெறும்பூர் ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு பழ வகைகளால் சிறப்பு அலங்காரம்

திருவெறும்பூர் ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு பழ வகைகளால் சிறப்பு அலங்காரம்
X

பழங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயர்.

அனுமன் ஜெயந்தியையொட்டி திருவெறும்பூர் ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு பழ வகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ரயிலடியில் அமைந்துள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீ அனுமான் ஜெயந்தி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அனுமன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூரில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோவிலில் இன்று அதிகாலை 4:30 மணி அளவில் அனுமானுக்கு 48 வகையான சிறப்பு அபிஷேகம் கர்ப்பகிரகத்தில் உள்ள அனுமானுக்கு மற்றும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மேலும் அனைத்து பழவகைகளை கொண்டு உற்சவருக்கு அலங்காரம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வழிபாடு செய்தனர். பொதுமக்கள் அரசு விதித்த வழிகாட்டுதலின் படி முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின் பற்றியும் அனுமதிக்கப்பட்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் சேவா சங்கமும் பொதுமக்களும் இணைந்து சிறப்பாக செய்து இருந்தனர்.

Tags

Next Story
the future of ai in healthcare