திருச்சி வாழவந்தான்கோட்டை இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருச்சி வாழவந்தான்கோட்டை இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
X

வாழவந்தான் கோட்டை முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

வாழவந்தான் கோட்டை அகதிகள் முகாம் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 433 குடும்பங்களுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துணிமணி, கேஸ் அடுப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் திருச்சி கலெக்டர் சிவராசு, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் கொட்டப்பட்டு தனித் துணை ஆட்சியர் ஜமுனாராணி, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, மாரியப்பன், ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ், தி.மு.க. நிர்வாகிகள் பழனியப்பன், மயில் பெரியசாமி, ஞானதீபம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!