திருவெறும்பூர் தனியார் பள்ளியில் ஸ்பெக்ட்ரம் சி.வி.டி. 2022 கண்காட்சி
திருச்சி திருவெறும்பூர் தனியார் பள்ளியில் மாணவர்கள் உருவாக்கிய கண்காட்சி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள செல்லம்மாள் வித்யாலயா பள்ளியில் இன்று 'ஸ்பெக்ட்ரம் சி.வி.டி2022 'என்ற கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் செந்தூர் செல்வன் , முதல்வர் உமாகுமாரசாமி முன்னிலையில் என்.ஐ.டி. பேராசிரியர்கள் சத்தியராஜ் வெங்கடேசன், சரவண இளங்கோ ஆகியோர் இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
கணிதம், விஞ்ஞானம், வரலாறு, புவியியல், தொழில்நுட்பம், மாெழிகள், விளையாட்டு, பொது அறிவு என அனைத்து பாட பிரிவுகளையும் உள்ளடக்கி கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
விமானங்களின் வடிவமைப்பு, தண்டி யாத்திரை செயல்பாடு, தாவர விதைகள் முளைப்பு முறை செயல்விளக்கம், முதலுதவி பெட்டி செயல்படுத்தும் முறை, பல்வேறு நாடுகளின் பாராளுமன்ற மாதிரிகள், டைனோசரின் மாதிரி மற்றும் அதன் வரலாறு, நீரின் மூலம் மின்சாரம் தயாரித்தல், கங்கை நதியின் சிறப்பு, கிராமப்புற மக்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை விளக்கும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
மாணவர்களின் செயல்திறனை வெளிப்படுத்திய இந்த கண்காட்சியை மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டு பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu