முற்றுகை போராட்டம் காரணமாக திருச்சியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டது

முற்றுகை போராட்டம் காரணமாக திருச்சியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டது
X

திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டம் காரணமாக கலெக்டர் உத்தரவின் பேரில் திருச்சியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து டாஸ்மாக் கடை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். போராட்ட களத்திற்கு திருச்சி கிழக்கு தாசில்தார் நேரில் வருகை தந்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் ஆணை வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் மதுபான கடை மூடப்பட்டது. இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, டைபி மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின், மாவட்ட தலைவர் சுரேஷ், பகுதி செயலாளர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!