விவசாய நிலங்களில் பசுமைப்போர்வை திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
திருச்சி அருகே பசுமை போர்வை இயக்க திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டது.
தமிழக விவசாய நிலங்களில் பசுமைப் போர்வைக்கான இயக்கம், திட்டத்தின் கீழ் காடுகள் வளர்ப்பு மற்றும் உப திட்டத்தில் மரக்கன்றுகள் விநியோக திட்டத்தின் கீழ் விளை நிலங்களில் பசுமை சூழலை கொண்டு வரும் நோக்கத்தில் மகோகனி, செம்மரம், தேக்கு, மலைவேம்பு, வேம்பு மற்றும் புங்கம் ஆகிய மரக்கன்றுகளை விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மணிகண்டம் வட்டாரத்தில் 8000 மரக்கன்றுகளுக்கு இலக்கீடு பெறப்பட்டு மணிகண்டம் வட்டாரத்தை சேர்ந்த கிராமங்களில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி மேக்குடி கிரமத்தை சேர்ந்த ராஜசேகரன் என்ற விவசாயிக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடந்தது.விழாவிற்கு திருச்சி வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன் தலைமை தாங்கினார். மணிகண்டம் வேளாண்மை உதவி இயக்குநர் பசரியா பேகம், மேக்குடி ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது
இந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் மணிகண்டம் வட்டார வேளாண்மை அலுவலர்கள் பரமசிவம் மற்றும் வெங்கட்டம்மாள், வேளாண்மை உதவி அலுவலர்கள் பழனிச்சாமி, ஐய்யப்பன், ரவி, பிரபாகர், ஜீவானந்தம், சுலோச்சனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu