திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் குடியரசு தின விழா நிகழ்ச்சி

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் குடியரசு தின விழா நிகழ்ச்சி
X

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் குடியரசு தினவிழா நடந்தது.

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் குடியரசு தின நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கித் தொழிற்சாலை மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் கருவிகள் இந்தியா லிமிடெட்டின் ஒரு பிரிவு ஆகும். இதில் நாட்டின் 73-வது குடியரசு தினவிழாவில் துப்பாக்கிதொழிற்சாலை (பொ) அதிகாரியான ஸ்ரீ அஷ்வனி குமார் சிங் புதிதாக அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்.

மேலும் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது அவர் கூறும்போது திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை நாட்டின் பாதுகாப்பிற்காக நவீனமயமாக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை உற்பத்தி செய்து இராணுவப் படைகள் மற்றும் போலீஸ் படைகளுக்கு ஆதரவளிக்க உறுதி பூண்டுள்ளது என்றார்.

விழாவில் மூத்த தரக் காப்பீட்டு அதிகாரி ஸ்ரீ சுதாகர் ராவ் உட்பட துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரிகள், அலுவலகப் பொறுப்பாளர்கள், தொழிற்சங்க நிர்வாகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai tools for education