திருவெறும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்த ரேஷன் கடைகள்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூர் ஒன்றியத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ரூபாய் 157.15 இலட்சம் மதிப்பில் நிறைவு பெற்ற திட்டப்பணிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு இன்று (08.10.2023) தொடங்கி வைத்தார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியிலிருந்து ரூபாய் 16.75 இலட்சம் மதிப்பீட்டில் மண்டலம் 3வார்டு எண் 16அம்மா குளம்பகுதியில் கட்டப்பட்டநியாயவிலைக்கடை, ரூபாய் 16.75 இலட்சம் மதிப்பீட்டில் மண்டலம் 3வார்டு எண்-37சீனிவாசநகரில் கட்டப்பட்டநியாயவிலைக்கடை, ரூபாய் 18.65இலட்சம் மதிப்பீட்டில் மண்டலம் 3வார்டு எண்-39எல்லக்குடியில் புதிதாகக் கட்டப்பட்டசீரணி அரங்கம், கீழ்கல்கண்டார்கோட்டை, வார்டு எண்-43ல் ரூபாய்16.75 இலட்சம் மதிப்பீட்டில்முருகன் கோவில் தெருவில்புதிதாகக்கட்டப்பட்ட நியாயவிலைக்கடை, வார்டு எண்-45ல் ரூபாய்16.75 இலட்சம் மதிப்பீட்டில் மேலகல்கண்டார் கோட்டையில் புதிதாகக் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை, வார்டு எண்-45 நடுபனக்கால் தெருவில் ரூபாய்16.60இலட்சம் மதிப்பீட்டில்புதிதாகக்கட்டப்பட்ட நியாயவிலைக்கடைஎன ரூபாய் 83.6இலட்சம் மதிப்பில்புதிய நியாயவிலைக்கடைகளையும்என மொத்தம் ரூபாய் 111.05 மதிப்பில் கட்டடங்களை திறந்து வைத்தார்.
மேலும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூர் ஒன்றியம், கீழக்குறிச்சி ஊராட்சியில் 15 வது நிதிக்குழு மானியம் 2022-2023 கீழ் அடைக்கல அன்னை நகர்2வது 3 வது தெருக்களில் ரூபாய் 12.10 இலட்சம் மதிப்பில்அமைக்கப்பட்ட கழிவுநீர்வடிகால்,ஊராட்சி பொது நிதித்திட்டம் 2021-2022 கீழ் அடைக்கல அன்னை நகர் 2 வது மற்றும் 3 வது தெருக்களில் ரூ.10 இலட்சம் மதிப்பில்அமைக்கப்பட்டுள்ள தார் சாலைகளையும், 15 வது நிதிக்குழு மானியம் 2020-2021 கீழ் ரூபாய்10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீh;த்தேக்கத் தொட்டிமற்றும்புதிய மோட்டாருடன் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக்கட்டடம், கீழ்கண்டார் கோட்டை மகாலட்சுமி நகரில் ரூபாய் 8.80இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மின்மாற்றிஆகியவற்றினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன்,கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் அபிபுல்லா, துணைப் பதிவாளர் பொது விநியோகத் திட்டம் முத்தமிழ்ச்செல்வி,மண்டலத்தலைவர் மதிவாணன், வட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன்,மாமன்ற உறுப்பினர்கள்,நீலமேகம், சிவா, கார்த்திக்,ரெக்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கூட்டுறவுத்துறை பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu