குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்: சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்:  சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
X

 பொன்மலைப்பட்டி, இந்தியன் பேங்க் அருகில் வீணாகும் தண்ணீர். 

திருச்சி மாநகராட்சி 36-வது வார்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாநகராட்சி 36-ஆவது வார்டு காந்தி தெரு, பொன்மலைப்பட்டி, இந்தியன் பேங்க் அருகில், சாலையில் ஒரு வாரம் மேலாக குடிதண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. அதிகளவில் வெளியேறும் தண்ணீர், சாக்கடையில் கலக்கிறது. தண்ணீர் வீணாவதுடன், சாலையும் சேறும் சகதியுமாகிறது. இப்பகுதி மக்கள் தண்ணீர் தேங்கிய சாலையில் செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

எனவே, திருச்சி மாநகராட்சி அதிகாரிகள், குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று, அந்த பகுதி பொதுமக்கள் சார்பில், மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு கே.சி.நீலமேகம் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture