திருவெறும்பூரில் குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் வீணாகிய குடிநீர்

திருவெறும்பூரில் குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் வீணாகிய குடிநீர்
X

திருச்சி திருவெறும்பூரில் குடிநீர் குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாகியது.

திருச்சி திருவெறும்பூரில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் குடிநீர் வெளியேறிய வீணாகியது.

திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை தோண்டிய பள்ளத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் குடிநீர் வீணாகியது.

திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான திருவெறும்பூர் சுப்பிரமணியபுரம் 2-வது தெரு பகுதியில் மாநகராட்சி சார்பில் நடை பெறும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பறிக்கப்பட்ட பள்ளத்தில் மண் மூடப்பட்டிருந்தது. அந்த பகுதியில் ஜேசிபி இயந்திரம் சென்றதால் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது,

குடிநீர் சாலைகளில் மழை நீரோடு பெருக்கெடுத்து ஓடியதால் குடிநீர் வீணாகிறது, இதனால் பல வீடுகளுக்கு குடிநீர் கிடைக்காத சூழ்நிலை உருவாகி உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!