துறையூர் அருகே ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட முதியவர் நிலை என்ன?

துறையூர் அருகே ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட முதியவர் நிலை என்ன?
X
ஆற்று வெள்ளத்தில் அடித்து  செல்லப்பட்ட முதியவர்.
துறையூர் அருகே ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவரை தீயணைப்பு படை வீரர்கள் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 75). இவர் தனது மாடுகளை வயலில் கட்டி இருப்பதாகவும் அவற்றை வீட்டிற்கு ஓட்டி வருவதாகவும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் பெருமாள் ஆற்றை கடக்கும் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இது குறித்து துறையூர் தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

துறையூர் பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதற்கிடையில் ஆற்றில் அதிகப்படியான நீர் செல்வதை அறிந்தும் முதியவர் கடந்து செல்ல முயற்சித்ததால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்