திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பாரம்பரிய மையம் திறப்பு

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பாரம்பரிய மையம் திறப்பு
X

திருச்சி என்.ஐ.டி.யில் பாரம்பரிய மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் பாரம்பரிய மையத்தினை நிர்வாக குழு தலைவர் பாஸ்கர் பட் திறந்து வைத்தார்.

என்.ஐ.டி. எனப்படும் என அழைக்கப்படும் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பாரம்பரிய மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதன் நிர்வாகக் குழு தலைவர் பாஸ்கர் பட் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு திருச்சி என்.ஐ.டி. இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் மற்றும் திருச்சி என்.ஐ. டி. யின் கூட்டு முயற்சியான இம்மையம் திருச்சி என்.ஐ.டி.யின் 56 ஆண்டுகால வரலாற்றை பறை சாற்றுகிறது.

இம்மையத்தை திறந்து வைத்து நிர்வாக குழு தலைவர் பாஸ்கர்பட் பேசுகையில் கடந்த காலத்தை பத்திரப்படுத்தி தற்காலத்திற்கு வரலாறு மற்றும் சார்பு குறித்த அறுபடாத உணர்ச்சியை தரும் அருங்காட்சியகங்கள் மற்றும் ஆவண காப்பகங்கள் பற்றி நினைவு கூர்ந்தார்.

திருச்சி என்.ஐ.டி.இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் தற்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக திகழும் இக்கழகத்தின் வளர்ச்சியை பறைசாற்றும் ஒலி-ஒளி சான்றாக அமைந்திருப்பதாக பாரம்பரிய மையத்திற்கான தேவையை வலியுறுத்தினார்.

திருச்சி என்.ஐ.டி. முன்னாள் மாணவர் சங்க தலைவர் மகாலிங்கம் பாரம்பரிய மையம் அமைக்கப்படுவதற்காக நிதி திரட்டிய முன்னாள் மாணவர்களுக்கு நன்றி கூறினார்.

பாரம்பரிய மையத்தின் கட்டிட வடிவமைப்பாளர் ஜோசப் ஹாஸ்டின், கழகத்தின் கல்விசார் மற்றும் கலாச்சார வாழ்வு பல வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறித்து விளக்க உரையாற்றினார்.

நிகழ்வின் நிறைவாக 'கழகம் தி ரோட் அஹெட்' என்ற தலைப்பிலான புத்தகம் வெளியிடப்பட்டது.

Tags

Next Story