திருச்சி என்.ஐ.டி. இயக்குனர் மினிஷாஜி தாமசுக்கு பிரிவுபசார விழா

திருச்சி என்.ஐ.டி. இயக்குனர் மினிஷாஜி தாமசுக்கு பிரிவுபசார விழா
X

திருச்சி என்.ஐ.டி. இயக்குனர் மினி ஷாஜி தாமசுக்கு பணி பாராட்டு பிரிவுபசார விழா நடந்தது.

திருச்சி என்.ஐ.டி. இயக்குனர் மினிஷாஜி தாமசுக்கு பிரிவுபசார விழா நடைபெற்றது.

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் எனப்படும் என். ஐ. டி. இயக்குனராக மினி ஷாஜி தாமஸ் கடந்த 2016ஆம் ஆண்டு பதவி பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் 56 ஆண்டுகால திருச்சி என்.ஐ‌.டி. வரலாற்றில் முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையை பெற்றிருந்த இவர் தனது ஐந்து ஆண்டுகால இயக்குனர் பணியை வெற்றிகரமாக முடித்து முடித்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு என்.ஐ.டி. வளாகத்தில் பணி பாராட்டு மற்றும் பிரிவுபசார விழா நடைபெற்றது.

மினி ஷாஜி தாமஸ் தான் பதவியேற்ற நாள் முதல் திருச்சி என்.ஐ.டி.யின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வந்தார். இதன் காரணமாக திருச்சி என்.ஐ.டி.கடந்த 6 ஆண்டு காலமாக இந்திய அளவில் உள்ள 31 தேசிய தொழில்நுட்ப கழகங்களிலும் முதலிடம் என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி என். ஐ.ஆர்.எப். எனப்படும் அகில இந்திய பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசையில் 12-வது இடத்திலிருந்து 9-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

மேலும் மொத்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் 34-வது இடத்தில் இருந்து 24-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.இவரது பதவிக் காலத்தில் திருச்சி என். ஐ. டி. யில் 5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் சுமார் 20 ஆண்டு காலமாக திருச்சி என் .ஐ .டி. யில் ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்படாமல் இருந்த சூழலில் 27 இளம்பெண்கள் உள்பட 119 பேருக்கு தகுதி, திறமையின் அடிப்படையில் இவரது பணிக்காலத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இவர்களில் 21பேர் குரூப் ஏ அளவில்பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பி அண்ட் சி பிரிவில் 92 பேர் நியமனம் பெற்றுள்ளனர்.

-இயக்குனர் மினி ஷாஜி தாமசின் பதவிகாலம் திருச்சி என்.ஐ.டி வரலாற்றில் ஒரு பொற்காலம் என கல்வியாளர்களால் புகழப்படுகிறது. அவருக்கு என்.ஐ. டி/ யின் அனைத்து பேராசிரியர் பெருமக்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil