திருச்சி என்.ஐ.டி.யில் புதிய மாணவிகள் விடுதி காணொலி மூலம் திறப்பு

திருச்சி என்.ஐ.டி.யில்  புதிய மாணவிகள் விடுதி காணொலி மூலம் திறப்பு
X
திருச்சி என்.ஐ.டி.யில் புதிய மாணவிகள் விடுதி காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்டது.
திருச்சி என்.ஐ.டி.யில் புதிய பெண்கள் விடுதியை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி மூலம் திறந்தார்.

திருச்சி என். ஐ. டி. என அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் ரூ.31.4 கோடியில் புதிதாக மாணவிகள் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. மேலும் ரூ.7 கோடியில் மேம்பட்ட உற்பத்தி மற்றும் ஆட்டோமேசன் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றின் திறப்பு விழா காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. விழாவுக்கு என்.ஐ.டி.இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் தலைமை தாங்கினார். விழாவில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் காணொலி காட்சி மூலம் பங்கேற்று விடுதி மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையத்தை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில் 'இந்தியாவில் 8 மாநிலங்களில் உள்ள 14 பொறியியல் கல்லூரிகளில் 5 பிராந்திய மொழிகளில் தொழில்நுட்ப கல்வி கற்பிக்கப்படும். இந்த கொள்கை நாடு முழுவதும் அமல்படுத்த படுவதால் கல்வித் துறையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும். என்.ஐ.ஆர்.எப். தரவரிசையில் திருச்சி என்.ஐ.டி முதல் இடத்தில் இருப்பதற்கு பாராட்டுக்கள்' என்றார்.

இவ்விழாவில் என்.ஐ.டி. நிர்வாகக்குழு தலைவர் பாஸ்கர் பட் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!