திருவெறும்பூர் பகுதியில் புதிய மின்மாற்றியை அமைச்சர் தொடங்கி வைத்தார்
திருவெறும்பூர் பகுதியில் புதிய மின்மாற்றியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திருச்சி மின் பகிர்மான பெருநகர் வட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் தொகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி கிழக்கு கோட்டம் திருவெறும்பூர் உட் கோட்டத்தில், கல்கண்டார் கோட்டை பிரிவிற்கு உட்பட்ட அதிக மின் அழுத்தம் சரிசெய்யவும் மற்றும் குறைந்த மின் அழுத்தத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டும் ரூ. 38.75 லட்சம் மதிப்பீட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்கண்டார் கோட்டை பிரிவில் மகாலட்சுமி நகர், ஆலத்தூர், காந்தி நகர், நாகம்மை வீதி, ராஜப்பா கிழக்கு கிருஷ்ணா ஸ்டோர்ஸ், மூகாம்பிகை நகர், அன்பில் நகர் ஆகிய இடங்களில் புதிய மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் , திருச்சி மண்டல தலைமை பொறியாளர் மேற்பார்வை பொறியாளர், திருச்சி செயற்பொறியாளர் கிழக்கு, திருச்சி உதவி செயற்பொறியாளர் திருவெறும்பூர் மற்றும் திருவெறும்பூர் கோட்டத்தின் கல்கண்டார் கோட்டை பிரிவு அலுவலக உதவி மின் பொறியாளர் மற்றும் பணியாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், பகுதி கழக செயலாளர்கள் தர்மராஜ், நீலமேகம் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu