திருச்சி பாப்பாகுறிச்சியில் புதிய மின் மாற்றி பயன்பாட்டிற்கு தொடக்கம்

திருச்சி பாப்பாகுறிச்சியில் புதிய மின் மாற்றி  பயன்பாட்டிற்கு தொடக்கம்
X

திருச்சி பாப்பாகுறிச்சியில் புதிய மின்மாற்றியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

திருச்சி பாப்பா குறிச்சியில் புதிய மின் மாற்றியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பிரிவு அலுவலகத்தின் பாப்பாகுறிச்சி கிராமம் கீதாபுரம் பகுதியில் ரூ. 2 லட்சத்து 78 ஆயிரத்து 240/- மதிப்பீட்டில் மின்மாற்றியை புதிதாக அமைத்து உள்ளது.

100 கிலோ வாட்/ 11 கே.வி. திறன் உள்ள இந்த மின் மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை பாப்பா குறிச்சி கீதா புரத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக சார்பில் மின்வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!