திருச்சி அருகே போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் கைது

திருச்சி அருகே போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் கைது
X
திருச்சி அருகே திருவெறும்பூரில் போதை மாத்திரை விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு காட்டூர் பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 36). ஆட்டோ டிரைவரான இவர் அரியமங்கலம் ஆயில் மில் ரோடு பகுதிக்கு ஒரு சவாரி சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு ஹோட்டல் அருகாமையில் நின்றபோது 2 பெண்கள் உட்பட 4 பேர் அவர் அருகே வந்தனர்.

பின்னர் தங்களிடம் போதை மாத்திரை இருக்கி றது. அதை நீங்கள் எடுத்துக் கொண்டால் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் என கூறினர். அப்போது ஆட்டோ டிரைவர் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறி அங்கிருந்து நழுவி செல்ல முயன்றார். இருந்தபோதிலும் அந்த கும்பல் விடாமல் 2 மாத்திரைகளை கொடுத்து விட்டு பின்னர் பணத்தை கொடுங்கள் என கூறினர்.

தன்னை போன்று பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர் சமுதாயத்தையும் இந்த கும்பல் கெடுத்து வருவதால் அதிர்ச்சி அடை ந்த சதீஷ், இது தொடர்பாக அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

உடனடியாக போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து போதை மாத்திரை கும்பலை சுற்றி வளைத்து பிடித்தது. விசாரணையில், பிடி பட்டவர்கள் திருவெறும்பூர் காவேரி நகர் சேவியர் மார்க்கெட் தெரு பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (24), அரியமங்கலம் மலையப்பன் நகர் அண்ணா தெரு பகுதி யைச் சேர்ந்த மதன் (39), திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதி சேர்ந்த தேவி (38 ), அரியமங்கலம் மலையப்பன் நகர் பெரியார் தெரு பகுதியைச் சேர்ந்த இந்திரா (32 )என்பது தெரிய வந்தது.

பின்னர் போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து 43 மாத்திரை கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அரியம ங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுசீலா வழ க்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
ai powered agriculture