தடை செய்யப்பட்ட லாட்டரியில் விழுந்த பரிசு தொகையை கொடுக்க மறுத்தவர் கைது

தடை செய்யப்பட்ட லாட்டரியில் விழுந்த பரிசு தொகையை கொடுக்க மறுத்தவர் கைது
X
திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரியில் விழுந்த பரிசு தொகையை கொடுக்க மறுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி பொன்மலைப்பட்டி காந்தி தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 34). இவர் பொன்னேரிபுரம் முதல் தெருவை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் 3 லாட்டரி சீட்டுகளை வாங்கி இருந்தார். அதில் ஒரு சீட்டிற்கு பரிசு விழுந்துள்ளது. அந்த பரிசுத் தொகையை செல்லத்துரை, குணசேகரனிடம் கேட்டுள்ளார். அப்போது குணசேகரன் பரிசுத் தொகையை கொடுக்க மறுத்ததுடன் செல்லத்துரையை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து பொன்மலை போலீசில், செல்லத்துரை புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக குணசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!